கருப்பசாமி ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 5001 பால் குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

கருப்பசாமி ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 5001 பால் குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற விநாயகபுரம் கருப்பசாமி ஆலயம். இவ்வாலயத்தில் ஆடி அமாவாசைத் திருவிழா கடந்த 10 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் கருப்பசாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்தது. 


இந்நிலையில் இறுதி நாள் திருவிழாவானநேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கருப்புசாமிக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் மற்றும் பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  வந்திருந்து இரவு முழுவதும் காத்திருந்து பங்கேற்று பயபக்தியுடன் பக்தி பரவசத்துடன் வழிபட்டதை பார்க்க முடிந்தது.


மேலும் சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலைப் பகுதியில் இருந்து 5001 பால் குடம் எடுத்த பக்தர்கள் அங்கிருந்து ஊர்வலமாக விநாயகபுரத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலிலுக்கு வந்து கருப்புசாமிக்கு பாலாபிஷேகம் செய்து பக்தியுடன் வழிபாடு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/