மதுரை திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரே நாளில் ரூபாய் 50 இலட்சத்திற்கு விற்பனை செய்து சாதனை ஒரேநாளில் 184 டன் வேளாண் விளை பொருட்கள் ஏலம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

மதுரை திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரே நாளில் ரூபாய் 50 இலட்சத்திற்கு விற்பனை செய்து சாதனை ஒரேநாளில் 184 டன் வேளாண் விளை பொருட்கள் ஏலம்.

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரே நாளில் ரூபாய் 50 இலட்சத்திற்கு விற்பனை செய்து சாதனை ஒரேநாளில் 184 டன் வேளாண் விளை பொருட்கள் ஏலம்.


திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள,  திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (09/08/2023) செங்கப்படை, எஸ்.பி.நத்தம், சித்தூர், லாலாபுரம், மேலஉரப்பனூர் கிராமங்களைச் சேர்ந்த ஆறு விவசாயிகளின் 37933 கிலோ இருங்குசோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 40 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 39.80 க்கும் விலை போனது. இதன்மூலம் ரூ 1541645 க்கு வர்த்தகம் நடைபெற்றது.  



மேலும் வாகைக்குளம், தங்களாச்சேரி, பன்னிக்குண்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆறு விவசாயிகள் மற்றும் தங்களாச்சேரியைச் சேர்ந்த இரு வியாபாரிகளின் 127 டன் மக்காச்சோளம்  ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 23 க்கும்‌ குறைந்தபட்ச விலையாக ரூ 22.80 க்கும்  ஏலம் போனது. இதன் மூலம் ரூ 2922840 -க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் சின்னபூலாம்பட்டி, குன்னத்தூர், கிராமங்களைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 234 கிலோ எள் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 130 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 120 க்கும் விலை போனது. இதன்மூலம் ரூ 29178 க்கு வர்த்தகம் நடைபெற்றது.  



அடுத்ததாக உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 17920 கிலோ அக்சயா நெல்  ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ 27.40 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 491008 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் உசிலம்பட்டி கிராமத்தைச்  சேர்ந்த ஒரு விவசாயியின் 99.500 கிலோ கம்பு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 28.75 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 2861 க்கு வர்த்தகம் நடைபெற்றது.  



மேலும் திருமங்கலத்தைச்   சேர்ந்த 100 கிலோ வெள்ளை சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 53 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 5300 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் கள்ளிக்குடி உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தைச்  சேர்ந்த 92 கிலோ உளுந்து ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 55 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 5060 க்கு வர்த்தகம் நடைபெற்றது.  


மேலும் கள்ளிக்குடி உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தை சேர்ந்த   145.899 கிலோ நிலக்கடலை ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 63 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 9185 க்கு வர்த்தகம் நடைபெற்றது.   ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ 5007077 க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்ற விபரம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை  9025152075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/