சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று (04.08.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரண்டார்குளம் பகுதியில் உள்ள குளம் அருகே வடக்கு விஜயநாராயணம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் லட்சுமணன் (35), ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் மருதையா (55), வடக்கு பன்னம்பாறை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாடசாமி (30) மேல பண்டாரபுரத்தைச் சேர்ந்த வெள்ளையா மகன் ராமகிருஷ்ணன் (41) மற்றும் சாத்தான்குளம் குவைகிணறு பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் அழகுராஜன் (49) ஆகிய 5 பேரும் சேர்ந்து சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் எதிரிகளான லட்சுமணன், மருதையா, மாடசாமி, ராமகிருஷ்ணன், மற்றும் அழகுராஜன் ஆகிய 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரொக்கப்பணம் ரூபாய் 20,820/- ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக