தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் சுதந்திர தின சதுரங்க கோப்பைகளுக்கான 46 -வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் சுதந்திர தின சதுரங்க கோப்பைகளுக்கான 46 -வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்.

தேனி  கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் சுதந்திர தின சதுரங்க கோப்பைகளுக்கான  46 -வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் 8 வயது, 10 வயது மற்றும் 14 வயது மாணவர்களுக்கு  15.08.23 இன்று காலை 10 மணி அளவில் எங்கள் அகாடமி வளாகத்தில் அகாடமி செயலாளர் R.மாடசாமி தலைமையிலும், பொருளாளர் S.கணேஷ்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. வனச்சரகர் (ஒய்வு) S. அமானுல்லா போட்டிகளை துவங்கிவைத்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.


முன்னதாக அகாடமி தலைவரும் தமிழ்நாடு சதுரங்க கழக நடுவருமான S.சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். போட்டி இயக்குனர் S. அஜ்மல்கான் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தார். வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்: Under-8 பிரிவில் மேலும் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு வழங்கியும், ICSE பள்ளிகளுக்கு நடந்த மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றிபெற்று தேசிய போட்டியில் பங்கேற்க பஞ்சாப் மாநிலம் செல்லவுள்ள மாணவன் S.ராம்சபரிஷ் க்கு அகாடமி சார்பில் விருது வழங்கி பாராட்டபட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/