செயின் பறிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

செயின் பறிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

செயின் பறிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை, கடந்த 23.09.2021-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், காட்டுச் செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பாண்டிச்சேரி, தனத்துமேடு பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மகன் விஜி(25) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து சத்யா அணிந்திருந்த நான்கு பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றது தொடர்பான திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை முடித்து எதிரியின் மீது இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.


இந்நிலையில் 23.08.2023-ந் தேதி திருக்கோவிலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி வெங்கடேஷ் குமார் தனது தீர்ப்பில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் எதிரி விஜி குற்றவாளி என்று உறுதி செய்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் 10,000/- ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 9 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார்.


இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற காவலர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மோகன்ராஜ் பாராட்டுகளை தெரிவித்தார்.


- கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் க.சமியுல்லா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/