சிங்கார பேட்டை எஸ் ஐ க்கு பிரிவு உபசார விழா;39 ஆண்டுகள் பணி முடித்து விடைபெற்றார் பழனிசாமி. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

சிங்கார பேட்டை எஸ் ஐ க்கு பிரிவு உபசார விழா;39 ஆண்டுகள் பணி முடித்து விடைபெற்றார் பழனிசாமி.

IMG-20230801-WA0012

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி நேற்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவு உபசார விழா சிங்கார பேட்டையில்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். சிங்காரப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை வரவேற்றார்.


சேலம் நகர டிஎஸ்பி அமல அட்வின், ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் பார்த்திபன், ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி, கல்லாவி இன்ஸ்பெக்டர் தமிழரசி, ஓசூர் அட் கோ இன்ஸ்பெக்டர் பத்மாவதி, நாமக்கல் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், மணிகண்டன் சிங்காரப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகமத் பாஷா ,திமுக பொறுப்பாளர் சேகர், வழக்கறிஞர்கள் மூர்த்தி, செல்வகுமரன் மற்றும் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, சேகர்  உள்ளிட்ட பலரும் போலீஸ் பணியில் 39 ஆண்டுகள் பணியின்போது எஸ் ஐ பழனிசாமியின் பணி  திறமை நேர்மை ஆகியவற்றை நினைவு கூர்ந்தனர். .முடிவில்  சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி  ஏற்புரை ஆற்றினார்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்திய நாராயணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad