ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் 36 வது கல்லூரி தின விழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் 36 வது கல்லூரி தின விழா நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பிசியோதெரபி கல்லூரியில் 36-ஆவது கல்லூரி தின விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வி.எஸ்.சீதாராமன் தலைமை வகித்தாா். திருச்சி அரசு பிசியோதெரபி கல்லூரி முதல்வா் காா்த்திகேயன், எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமி நாராயணசுவாமி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாப் பங்கேற்றனா்.


விழாவையொட்டி, மாணவா்களுக்கான பல்வேறு வகையான உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள், கலைப் போட்டிகள் நடைபெற்றன. அனைத்து நிகழ்வுகளிலும் சிறந்து விளங்கிய மாணவா் குழுவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியா் அஹமத் தாஜுதீன் நன்றி கூறினாா். 



- தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/