நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக உதகையில் தனியார் நிறுவனம் சார்பில் மாபெரும் கடல் வாழ் உயிரின உணவு திருவிழா
நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக உதகையில் தனியார் நிறுவனம் சார்பில் மாபெரும் கடல் வாழ் உயிரின உணவு திருவிழா நடைபெற்று வருகிறது
இன்று6ம் தேதி நாளை 7ம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வரும் இந்த உணவு திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட மீன் வகைகள் நண்டு இறால் போன்ற உணவு வகைகள் இடம்பெற்றன
இது உணவு பிரியர்களுக்கான ஒரு திருவிழாவாக மாறி உள்ளது
பிற்பகல்12 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த உணவு திருவிழா நடைபெறுகிறது
இந்த திருவிழாவானது சேரிங்கிராஸ் தேவாங்கர் திருமண மண்டபம் அருகே உள்ள மகளிர் திட்ட வணிகவளாகத்தில் நடைபெற்று வருகிறது
இன்று முதல் நாளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான மீன் வகை,மீன் உணவுகளை ருசித்து மகிழ்ந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக