தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவு திட்டம்-2 வருகின்ற 25-8-23 அன்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளதையொட்டி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், கொளக்குடி ஊராட்சி, லட்சுமிபுரம் மற்றும் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் இன்று (22-8-23) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப்,இ.ஆ.ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக