தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் அருகே முள்ளக்காடு தேவி நகரை சேர்ந்த கணேசன் மகன் அஜித் (26) என்பவருக்கும், முத்தையாபுரம் ராஜீவ் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் முகேஷ் (19) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக மது அருந்தும் போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 03.08.2023 அன்று முகேஷ் மற்றும் அவரது சகோதரர்களான முத்துராஜ் (23), சின்னராஜ் (28) மற்றும் முகேஷின் உறவினரான முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் ராசையா (32) ஆகிய 4 பேரும் சேர்ந்து மேற்படி அஜித்தின் சகோதரரான மகேஷ்குமார் (22) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மகேஷ்குமாரின் அப்பாவான கணேசன் அளித்த புகாரின் அடிப்படையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து முத்துராஜ் மற்றும் சின்னராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக