மதுரை மாவட்டத்தில்2 வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தொடர் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஆகஸ்ட், 2023

மதுரை மாவட்டத்தில்2 வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தொடர் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

2 வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தொடர் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



 மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி (வயது67). இவர் ஊர் காவலராக இருந்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது ஒரு மகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் கோவில்பட்டியில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் அருகிலேயே மகள் வசித்து வருகிறார். தனுஷ்கோடியும், அவரது மனைவியும் தோட்டத்தில் உள்ள வீட்டில் இரவு தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று காலையில் தோட்டத்து வீட்டில் இருந்து வந்தனர். வீட்டை திறந்து பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. பொருட்கள் சிதறிக்கிடந்தது.  இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீரோவில் பார்த்தபோது ரூ.1½ லட்சம், 4½ பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் தனுஷ்கோடி புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் அருகே மேலஉப்பிலிகுண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி இருளாயி. இவர்கள் வீட்டின் பீரோவில் 4½ பவுன் நகை, ரூ.10 ஆயிரம் வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று பீரோவில் பார்த்தபோது லாக்கர் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில், இருளாயி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலத்தை சுற்றியுள்ள கிராமப்பகுதி களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 
போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டு மென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/