தூத்துக்குடி மாவட்டம், கடந்த 08.08.2023 அன்று ஆத்தூர் அருகே நிலைய எல்லைக்குட்பட்ட பழைய காயல் பகுதியில் வைத்து திருச்செந்தூர் to மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேரூந்தை வழிமறித்த மர்ம நபர்கள் பேரூந்து நடத்துனரை தாக்கி அவரிடம் இருந்த பணப்பையில் இருந்து ரூபாய் 11,500/- பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அரசு பேரூந்து நடத்துனர் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வகுமார், தலைமை காவலர்கள் ஜேக்கப் தங்கமோகன், முத்துக்குமார் மற்றும் காவலர் முனியசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காயல்பட்டணம் சிங்கித்துறை பகுதியைச் சேர்ந்த கசாலி மகன் முத்து ஜமால் (20), காயல்பட்டணம் பரிமார் தெருவைச் சேர்ந்த மீரா ஷா மகன் மாலிக் ஹீசைன் (20) மற்றும் ஒருவர் ஆகியோர் சேர்ந்து பேரூந்து நடத்துனரை தாக்கி பணம் பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் நேற்று முத்து ஜமால் மற்றும் மாலிக் ஹீசைன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் மேற்படி போலீசார் தலைமறைவான மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக