தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் நகர வணிகர் சங்கத்தின் 23 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாசரேத் ஜோதி மாளிகையில் 27.08.2023 அன்று சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் நகர வணிகர் சங்கத்தின் 23 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாசரேத் ஜோதி மாளிகையில் 27.08.2023 அன்று சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் உத்தரவுபடி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பொற்செல்வன் அறிவுறுத்தலின் படி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன், உடையார் குளம் அரசு துணை சுகாதார நிலைய மருத்துவர் விஜயகுமார், தூத்துக்குடி மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் டாக்டர் ஜோஸ்வா பிரவுன் மற்றும் துணை இயக்குனர் சுகாதார பணிகளின் நேரடி உதவியாளர் மதுரம் பிரைட்டன், சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், ஜேசுராஜ், ஞானராஜ், மகேஷ் குமார், திருவடி வாசன், வட்டார சுகாதார ஆய்வாளர் பால் ஆபிரகாம், சுகாதார செவிலியர்கள், சித்த மருத்துவ பிரிவு மற்றும் மக்களை தேடி மருத்துவம் குழுவினர் ஆகியோர் நாசரேத் வணிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின்  போன்ற மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து காலை 11.00 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்துடன் நாசரேத் நகர வணிகர் சங்க 23 வது ஆண்டு விழா இனிதே துவங்கியது, சங்க நிர்வாக குழு உறுப்பினர் பாபு செல்வன் வரவேற்று பேசினார். 2023 - 24 ஆண்டுக்கான புதிய தலைவராக ஜெபஸ் திலகராஜ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமை உரை ஆற்றினார், அவர் பேசுகையில் அரசு தடை செய்ய பட்ட குட்கா போன்ற பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்ய கூடாது என்றும், வணிகர் சங்க தொடர் முயற்சியின் விளைவாக நாசரேத் ரயில் நிலையம் மேம்படும் வகையில் புதிதாக நகரும் படிக்கட்டுகள் அமைக்க (எஸ்கலட்டர்) மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது எனவும் கூறினார். 

முன்னிலையாக VSR குழுமத்தின் உரிமையாளர் VS ராமச்சந்திரன் கலந்து கொண்டார், புதிய பொருளாளராக லயன் அகிலன் பொறுப்பேற்று கொண்டார். துணை தலைவராக ஆறுமுகம், துணை செயலராக செய்யது ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். 


நிர்வாக குழு புதிய உறுப்பினராக ஜெபராஜ், நோவா சாலமோன், செல்வாஸ் செல்வராஜ் ஆகியோர் தேர்தெடுக்கபட்டனர். கூட்டத்தில் பொறியாளர் வே. இரஞ்சன் கூறுகையில் நாசரேத் நகரம் தாலுகா அந்தஸ்து பெற முதலில் குறுவட்டமாக மாற வேண்டும் என பரிந்துரை செய்தார், இதனை சங்கத்தில் தீர்மானமாக நிறைவேற்றினர். 


சிறப்பு அழைப்பராக வந்திருந்த துணை இயக்குநர் சுகாதார பணிகளின் நேரடி உதவியாளர் மதுரம் பிரைட்டன் பேசுகையில் "நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல்" எனும் குறள் பாடி நோயின்றி வாழும் முறைகளை விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் குடும்ப ஆரோக்கியம் மிக அவசியம் "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" என்றும்  அனைவரும் கட்டாயம் உடற் பயிற்சியுடன் தினசரி நடைபயிற்சி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

நிர்வாக குழு உறுப்பினர்கள் மாமல்லன், தேவதாஸ் ஆகியோர் பேசுகையில் வியாபாரம் இன்னும் மேம்படுத்துவதற்கு தொழில் சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் பேசும் போது வணிகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன? அவற்றை வணிகர் சங்கம் எவ்வாறு தீர்த்து வைக்கிறது என்பதை மிகத் தெளிவாக எடுத்து கூறினார்.


அதன் பின்பு பேசிய வணிகர் சங்க செயலர் பொறுப்பேற்ற வே செல்வன் அனைத்து வணிகர்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும், வருங்காலங்களில் சிறப்பாக செயல் படுவோம் என கூறி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி அனைவரும் நாட்டுப்பண் பாட விழா இனிதே நிறைவுற்றது.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/