போலி ஆசிரியர் பயிற்சிப்பள்ளி நடத்தி வந்த நபருக்கு வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 22 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு
இராணிப்பேட்டை மாவட்டம்
கடந்த 27.10.2007 அன்று வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரை சேர்ந்த பூபாலன் என்பவரின் மகன் கலைவாணன் என்பவர் மீது மாவட்ட குற்றப் பிரிவில் போலியாக ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்தி ஏமாற்றி பண மோசடி செய்த குற்றத்திற்காக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கு சம்மந்தமாக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-II ல் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் 25.08.2023-ம் தேதி குற்றவியல் நீதிமன்ற நடுவர் திருமால் அவர்களால் வழக்கில் தொடர்புடைய கலைவாணன் என்பவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய். 1,10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் இவ்வழக்கை நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி தண்டனை பெற்று தந்த கூடுதல் அரசு வழக்கறிஞர் இந்திரா முஷா மற்றும் வழக்கின் புலனாய்வு அதிகாரி சித்ரா, உதவி ஆய்வாளர் (மாவட்ட குற்ற பிரிவு) மற்றும் நீதிமன்ற காவலர் (HC-266) சுரேஷ் ஆகியோரை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி,
இ. கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக