தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் வழிப்பறி - செல்போன், வெள்ளிக்கொடி மற்றும் மணிப்பர்ஸை பறித்துச் சென்றவர்கள் கைது - ரூபாய் 22,000/- மதிப்புள்ள செல்போன் மற்றும் வெள்ளிக்கொடி பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் வழிப்பறி - செல்போன், வெள்ளிக்கொடி மற்றும் மணிப்பர்ஸை பறித்துச் சென்றவர்கள் கைது - ரூபாய் 22,000/- மதிப்புள்ள செல்போன் மற்றும் வெள்ளிக்கொடி பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் வழி மறித்து செல்போன், வெள்ளிக்கொடி மற்றும் மணிப்பர்ஸை பறித்துச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வென்றிலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ராமர் மகன் கிருஷ்ணமுத்து சிவா (26) என்பவர் தூத்துக்குடி ஏரல் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16.08.2023 அன்று இரவு மேற்படி கோவிலின் அருகில் உள்ள பாலம் அருகே கிருஷ்ணமுத்து சிவா சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவரிடமிருந்து செல்போன், இடுப்பில் இருந்த வெள்ளிக்கொடி மற்றும் மணிப்பர்ஸை பறித்துச் சென்றுள்ளனர்.


இதுகுறித்து கிருஷ்ணமுத்து சிவா நேற்று (17.08.2023) அளித்த புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், குரும்பூர் அருகே சொக்கப்பழங்கரை பகுதியை சேர்ந்த சிவபெருமாள் மகன் முத்து தினேஷ் (23), ஏரல் பகுதியை சேர்ந்த மருந்துபாண்டி மகன் சுபாஷ் (29), ஏரல் சிறுதொண்டநல்லூர் பகுதியை சேர்ந்த ஜாகிர் ஹூசைன் மகன் முகம்மது ஷபின் (23) மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஒரு இளஞ்சிறார் ஆகிய 4 பேரும் சேர்ந்து மேற்படி கிருஷ்ணமுத்து சிவாவை வழிமறித்து அவரிடமிருந்து செல்போன், வெள்ளிக்கொடி மற்றும் மணிப்பர்ஸை பறித்துச் சென்றுள்ளனர்.


இதனையடுத்து ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா மற்றும் போலீசார் மேற்படி நபர்களான முத்து தினேஷ், சுபாஷ் மற்றும் முகமது ஷபின் ஆகிய 3 பேரை கைது செய்தும், மேற்படி இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர். மேலும் எதிரிகளிடமிருந்து ரூபாய் 22,000/- மதிப்புள்ள செல்போன் மற்றும் வெள்ளிக்கொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/