திருநெல்வேலி - ஆடி அமாவாசையை 2023 முன்னிட்டு, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு, ஆகஸ்ட் 15,16,17 ஆகிய மூன்று நாள்கள் மட்டும் வரலாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

திருநெல்வேலி - ஆடி அமாவாசையை 2023 முன்னிட்டு, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு, ஆகஸ்ட் 15,16,17 ஆகிய மூன்று நாள்கள் மட்டும் வரலாம்.

திருநெல்வேலி, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு 15,16,17 /08/2023- ஆடி அமாவாசை  G.O 3 ல் குறிப்பிட்டவாறு பொதுமக்கள் முகாமிற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.


தனியார் ஊர்திகளில் வருபவர்கள், 
அகஸ்தியர்பட்டி என்ற இடத்தில் ஊர்திகளை நிறுத்திவிட்டு, அங்கிருந்து அரசுப் பேருந்துகளில் மட்டும்தான் கோவிலுக்குப் போக முடியும். ஆகஸ்ட் 12 முதல் 21 வரை அகஸ்தியர் அருவியில் குளிக்கத் தடை. இடைக்கால ஏற்பாடாக காடுகள் பாதுகாப்புத் துறை கட்டிய கழிப்பு அறைகளை, கடந்த ஆண்டு சில நூறு பேர்தான் பயன்படுத்தினார்கள். 


மற்றவர்கள் திறந்த வெளியில் மலம் கழித்தார்கள். அது விலங்குகளுக்குக் கேடு. எனவே, திறந்தவெளியில் மலம் கழிக்கத் தடை. களக்காடு திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்குச் செல்ல முழுத்தடை விதிக்கப்படுகின்றது. 


ஆகஸ்ட் 21 க்குப் பிறகு, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வழக்கமாக வரலாம் என அறிவிப்பு. இந்தப் பகுதி முழுமையும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு விட்டது. 


குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலுக்குப் போக ஆண்டு முழுமையும் தடை விதிக்கப்பட்டது போல, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வழிபாட்டு இடங்களுக்குப் போவதற்கு ஆண்டு முழுமையும் தடை விதிக்க வேண்டும்.



14/08/2023 - அகஸ்தியர் அருவி சுற்றுலா பயணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது.


18/08/2023 - கோவிலுக்கு செல்லும் பொதுமக்கள் அரசு பேருந்து மூலம் கோவிலில் இருந்து கீழே இறங்கவும்.


19/08/2023 - ஆடி அமாவாசை முடிந்த பிறகு பொதுமக்களால் வனப்பகுதிக்குள் விட்டுச் செல்லப்பட்ட  கழிவுகளை அகற்றும் பணி இருப்பதால் அகஸ்தியர் அருவி மூடப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் காக்காச்சி மற்றும்  குதிரைவெட்டி பகுதிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.



- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/