தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகில் உள்ள ஆதிநாதபுரம் பகுதியில் அரசு தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அப்பள்ளிக்கு ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவி பொ.சாரதா பொன் இசக்கி வருகை புரிந்தார், அவரை பள்ளியின் தலைமை ஆசிரியை வரவேற்றார், அங்கு பயிலும் மாணவ மாணவிகளுடன் ஆழ்வை பேரூராட்சி தலைவி கலந்துரையாடினார்.
பின்பு கலைஞரின் நூறாவது ஆண்டை முன்னிட்டு அப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 170 மாணவ மாணவிகளுக்கு, தங்கள் பொது அறிவை மேம்படுத்தும் வகையில் ரூபாய் 20,000 மதிப்புள்ள பொது அறிவு புத்தகங்களை ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன் இசக்கி இலவசமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆதிநாதபுரம் ஊர் தலைவர் பொது மக்கள் , கிராம நிர்வாக அதிகாரி மற்றும் பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக