அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் ரூபாய் 16கோடி மதிப்பில் மேம்படுத்த அடிக்கல் நாட்டினார் பாரத பிரதமர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் ரூபாய் 16கோடி மதிப்பில் மேம்படுத்த அடிக்கல் நாட்டினார் பாரத பிரதமர்.

.com/img/a/

காணொளி காட்சி வாயிலாக அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் ரூபாய் 16கோடி மதிப்பில் மேம்படுத்த அடிக்கல் நாட்டினார் பாரத பிரதமர், பாரத பிரதமர் தொடங்கியுள்ள அம்ரித் பாரத் திட்டத்தின்படி தென்னக ரயில்வேயில் 25 ரயில்வே நிலையங்கள் மேம்படுத்த சுமார் 616 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


இதில் தமிழ்நாட்டில் மட்டும் 18 ரயில்வே நிலையங்கள் அடங்கும். பாரத் திட்டத்தின் மூலம் ரயில்வே நிலையங்களில் மேம்பாடு பணிகளாவன, நடைமேடை மேம்பாலம், மின் தூக்கி, மின் நகரும்படி, ரயில்வே நிலையங்களில் சுற்றுப்புற மேம்பாடுகள், கார் மற்றும் டூவீலர் நிறுத்த இடம், பயணிகள் தகவல் நிலையம், நடைமேடை மற்றும் நடைமேடை கூரைகளில் அபிவிருத்தி செய்தல், மின் விளக்கு, மின்சார தடையில்லா வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள் ஆகியன செய்யப்பட உள்ளன.



ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்திற்கு ரூபாய் 16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் தென்னக ரயில்வே சந்திப்புக்களில் மிகவும் முக்கியமானது. கர்நாடகா மாநிலம் மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில்வே சந்திப்பாக தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் திகழ்கிறது. மேலும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலை வந்து செல்ல ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில்வே நிலையத்தில் இத்தகைய மேம்பாட்டு பணி   ரயில் பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் பெரிதும்  வரவேற்றனர்.

.com/img/a/

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை சான்றிதழ்களை வழங்கினர். 


நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி,  திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் , அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கு பெற்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad