காட்டுமன்னார்கோவில், ஆக.31 கடலூர் மாவட்டம் குமராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு v10ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது
இவ்விழாவிற்குபள்ளி தலைமை ஆசிரியர் பிரணவ்மாறன் தலைமை தாங்கினார் உதவி தலைமை ஆசிரியர் ராஜா முன்னிலை வகித்தார் இதில் சிறப்புஅழைப்பாளராக
ஊராட்சி மன்ற தலைவரும்,வர்த்தக சங்கத் தலைவருமான கேஆர்ஜி தமிழ்வாணன் கலந்து கொண்டு 12ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற தீபிகா என்ற மாணவிக்கு ரூ10ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன், மற்றும் 10ம் அரசு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சைலஜாவுக்கு ரூ 6 ஆயிரம் மதிப்புள்ளசைக்கிள் ஆகியவற்றை பரிசாக வழங்கி மாணவிகளை பாராட்டி வாழ்த்து கூறினார் .இதில் பள்ளிஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன் கலைவாணன் சுப்பிரமணியன் பாண்டியன் உள்பட பலர்கலந்துக் கொண்டனர்
தமிழக குரல் செய்தியாளர்
P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக