புதுக்கோட்டை - காப்பர் வயர்களை திருடியவர் கைது - ரூபாய் 16,500/- மதிப்புள்ள காப்பர் வயர்கள் பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

புதுக்கோட்டை - காப்பர் வயர்களை திருடியவர் கைது - ரூபாய் 16,500/- மதிப்புள்ள காப்பர் வயர்கள் பறிமுதல்.

image%20(75)

தூத்துக்குடி, அருகே புதுக்கோட்டை அடுத்த தெற்கு சிலுக்கன்பட்டி பகுதியிலுள்ள தனியார் டைட்டானியம் நிறுவனத்தில் நேற்று (06.08.2023) காப்பர் வயர்கள் திருடு போயுள்ளது.



இதுகுறித்து மேற்படி தனியார் டைட்டானியம் நிறுவனத்தின் மேலாளரான தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த வேல் மகன் ஆத்திமுத்து (52) என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மேற்படி தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்க்கும் புதுக்கோட்டை கீழதட்டப்பாறை, தெற்கு காலனியை சேர்ந்த பிச்சையா மகன் வேல்முருகன் (27) மற்றும் சிலர் சேர்ந்து நிறுவனத்தில் இருந்த காப்பர் வயர்களை திருடி சென்றது தெரியவந்தது.


இதனையடுத்து புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஞானராஜன், வேல்முருகனை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 16,500/- மதிப்புள்ள 11 மீட்டர் நீளமுள்ள காப்பர் வயர்களையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad