நாசரேத் அருகே பிரகாசமாய் பரிசுத்த பரலோக மாதா ஆலயம் திருவிழா இன்று முதல் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

நாசரேத் அருகே பிரகாசமாய் பரிசுத்த பரலோக மாதா ஆலயம் திருவிழா இன்று முதல் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.

photo_2023-08-06_21-41-53

நாசரேத் அருகே பிரகாசமாய் பரிசுத்த பரலோக மாதா ஆலயம் திருவிழா இன்று துவங்கி வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. முதற்கட்டமாக இன்று மாலை பேண்டு இன்னிசை முழங்க பங்கு மக்கள் புடைசூழ கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ச்சியாக திருவிழா முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 


அதில் 10ம்தேதி 5ம்நாள் திருவிழாவில் இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 11ம் தேதி 6ம் திருவிழா அதில் பிரகாசபுரம் புனித மரியன்னை நடுநிலை பள்ளியின் ஆண்டு விழா நடக்கிறது. 12ம் தேதி 7ம் திருவிழா அதில் மறைக்கல்வி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 13ம் தேதி 8ம் திருவிழா நடக்கிறது அதில் மகிழ்ச்சியான வாழ்க்கை அந்த காலத்திலா அல்லது இந்த காலத்திலா என்னும் நகைச்சுவை பட்டிமன்றம் நடுவர் புத்தன்னேரி செல்லப்பா தலைமையில் நடக்கிறது.


14ம்தேதி 9ம் திருவிழா அன்று இரவு 12 மணிக்கு சப்பரம் சுற்றி வருதல் மற்றும் வாணவேடிக்கை நடக்கிறது. 15ம்தேதி 10 திருவிழா அன்று இரவு கோட்டாறு நாஞ்சில் கலைக்குழு வினரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அன்று திருப்பலி முடிந்தவுடன் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி நடக்கிறது. ஏற்பாடுகளை பங்கு தந்தை சலேட்ஜெரால்ட் தலைமையில் விழாக்குழுவினர் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad