நீலகிரி மாவட்டத்தில் ஏழைஎளிய மக்கள் பயன் பெறும் வகையில் 14 கோடி மதிப்பில் மக்கள் நலபணிகள் 1138 பசுமை வீடுகள் என மக்கள் பணியில் சாதனை படைக்கும் ஒன்றிய பெருந்தலைவர் கீர்த்தனா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டத்தில் ஏழைஎளிய மக்கள் பயன் பெறும் வகையில் 14 கோடி மதிப்பில் மக்கள் நலபணிகள் 1138 பசுமை வீடுகள் என மக்கள் பணியில் சாதனை படைக்கும் ஒன்றிய பெருந்தலைவர் கீர்த்தனா


 ஏழைஎளிய மக்கள் பயன் பெறும் வகையில் 14 கோடி மதிப்பில் மக்கள் நலபணிகள் 1138  பசுமை வீடுகள் என மக்கள் பணியில் சாதனை படைக்கும் ஒன்றிய பெருந்தலைவர் கீர்த்தனா

கூடலூர் ஊராட்சி ஒன்றியம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.கூடலூர் வட்டத்தில் அமைந்த கூடலூர் ஊராட்சி ஒன்றியம் ஐந்து கிராம ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கூடலூரில் இயங்குகிறது


கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில்

ஸ்ரீமதுரை,நெலாக்கோட்டை,முதுமலை,

மசினகுடி,சேரங்கோடு என 5 கிராம ஊராட்சிகள் உள்ளன


கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக கீர்த்தனா மிக சிறப்பாக மக்கள் நலப்பணிகளை செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்


கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு

உட்பட்ட 5 கிராம ஊராட்சி பொதுமக்கள் பயன் பெரும் வகையில்  ஊராட்சி ஒன்றிய பொதுநிதி மூலம்  8 கோடிக்கும் மேற்பட்ட  மதிப்பில் பல்வேறு பணிகளை மிக சிறப்பாக செய்துள்ளார்


15வது நிதிக்குழு மானிய திட்டம் மூலம்  6 கோடி மதிப்பில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மக்கள் பயன்பெரும் வண்ணம் செய்துள்ளார்


பழங்குடியின மக்கள் பயன் பெரும் வகையில் 1138 பசுமை வீடுகளை கட்டி கொடுத்துள்ளார்


சாலை பணிகள்,தடுப்புசுவர்கள்,குடிநீர் பணிகள் என மக்களுக்கு தேவையான அனைத்தையும் அவர்கள் தேவைகளை அறிந்து செய்து பாராட்டுகளைபெற்று வருகிறார்


இவரின் மக்கள் நலப்பணிகளை பாராட்டி கடநாடு ஊராட்சி சொக்கநள்ளி ஆதிவாசிகள் கிராமத்தில் நடைபெற்ற மக்களுக்காக அறக்கட்டளையின் நிறுவனர் தின நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அறக்கட்டளை நிறுவனர் தமிழ்வெங்கடேசன் தலைமையில் ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் கே.பி.அருண் கூடலூர் ஊராட்சி.ஒன்றிய தலைவர் கீர்த்தனா அவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருதை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/