தூத்துக்குடியில் வருகிற 13ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடியில் வருகிற 13ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்.

தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்ட துனை தலைவர் சிவராமன் வெளியிட்ட அறிக்கையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் எழுச்சி நடை பயணமான "என் மண் என் மக்கள்" நிகழ்ச்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வருகிற 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் காய்கனி மார்க்கெட் அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் இருந்து தொடங்கி, சிவன் கோயில் ரதவீதிகள் வழியாக சென்று அந்தோணியார் கோயில் வழியாக சண்முகபுரம் சந்தி விநாயகர் கோயிலில் முடிவடைகிறது. 


பின்னர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அளவில் ஆழ்வார் திருநகரியில் இருந்து மாலை 4 மணி தொடங்கி வஉ சிதம்பரனார் பிள்ளை மனைவி மீனாட்சி அம்மாள் பிறந்து வளர்ந்த ஊரான சித்திரை வீதி வழியாக ஸ்ரீவைகுண்டம் தேவர் சிலை முன்பு முடிவடைகிறது.


திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 14ம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் வீரபாண்டிய பட்டினத்தில் ஆரம்பித்து இரும்பு ஆர்ச், முதல் சந்திதெரு, சிவன் கோயில் வாசல், சன்னதி தெரு முகப்பு வழியாக புளியடி மாரியம்மன் கோயில், சபாபதிபுரம் சந்திப்பு, பால்பண்ணை தெரு சந்திப்பு, கிருஷ்ணன்கோவில் வழியாக முத்தாரம்மன் கோயில் சந்திப்பு மற்றும் தெப்பக்குளம் சந்திப்பில் முடிவடைகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/