நெமிலியில் கல்லாறு மேம்பாலம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு பெ. வடிவேலு நன்றி! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

நெமிலியில் கல்லாறு மேம்பாலம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு பெ. வடிவேலு நன்றி!

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய குழு கூட்டம், ஒன்றிய குழு பெருந்தலைவர். பெ. வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் நெமிலி முதல் அரக்கோணம் வரை செல்லும் சாலையில் உள்ள (விஜயபுரம் அருகில்) கல்லாற்று தரைபாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கும் முன்னதாக கட்டப்பட்டது. 


மழைக்காலங்களில் இந்த தரைபாலம் வழியாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். இதனால் இந்த வழியே போக்குவரத்து தடை செய்யப்பட்டு சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றிக்கொண்டு அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று வர வேண்டிய கடினமான சூழ்நிலை ஏற்பட்டு வந்தது இதனால் இதன் வழியே செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். 


எனவே இந்த தரைப்பாலத்தை அகற்றி புதியதாக மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதை தொடர்ந்து கடந்த மாதம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் மாநில நெடுஞ்சாலை துறை மூலம் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பழைய தரைப்பாலத்தை அகற்றி புதிய மேம்பாலம் ஒன்றை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது. 


மிக விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், இதற்கு பரிந்துரை செய்து ஆவணம் செய்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்களுக்கும் இக்கூட்டத்தின் மூலம் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு நன்றியும், நெமிலி ஒன்றியத்தில் ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அளவில் மேம்படுத்தப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இந்த கூட்டத்தில் நெமிலி ஒன்றிய துணை பெருந்தலைவர். தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள். பிரபாகரன், ரவி, ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பிற துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/