நாளை 07.08.2023 காலை முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அமலிநகர் மீனவர்கள் அறிவித்துள்ளனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

நாளை 07.08.2023 காலை முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அமலிநகர் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

IMG_20230806_225824_317

திருச்செந்தூர், அமலிநகர் மீனவ கிராமத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றாத மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.



இந்நிலையில், திருச்செந்தூர் தாசில்தார் வாமணன் தலைமையில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், மற்றும் மீன்வளத்துறை   ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அமலிநகர் மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நாளை காலை முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.


நேற்று முன்தினம் 04.08.2023 அன்று அமலிநகர் மீனவர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி கூறினார்.

IMG_20230806_230046_167

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள அமலிநகர் மீனவ கிராமத்திலிருந்து கடந்த 01-08-2022 அன்று நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்கள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் அஸ்வின்(32), பிரசாத் (42) ஆகிய மீனவர்கள் மாயமாகினர். இதையடுத்து மாயமான மீனவர்களின் மனைவிக்கு ஆறுதல் கூறி, அரசு வேலை தருவதாக மாவட்ட ஆட்சியரும், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாக்குறுதி அளித்து சென்றுள்ளனர்.



ஆனால், ஒரு வருட காலம் கடந்த பின்பும் மாயமான மீனவரின் மனைவிக்கு அரசு வேலை ஏதும் வழங்கவும் இல்லை அந்த மீனவ குடும்பங்களை கண்டு கொள்ளவும் இல்லை என தெரிகிறது. மேலும் அமலி நகர் மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் அதிகரிப்பால் அப்பகுதியில் உள்ள கிராமம் மண்ணரிப்பு ஏற்படுவதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் ஒன்றோடு ஒன்று இடிபட்டு சேதம் அடைந்து வருகிறது.


இதனால், அந்த மீனவ கிராமத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழலும், படகு சேதமடைவதால் நஷ்டம் ஏற்படுவதாகவும் இதையும் மாவட்ட நிர்வாகத்திற்கும், மீன்வளத்துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் மீதும் நடவடிக்கை எடுக்காததினால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்பு மாவட்ட ஆட்சியர் அழைத்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் போராட்டம் கைவிடப்பட்டது.


இந்நிலையில் 01/08/2023 அன்று, கடலில் மாயமான மீனவர்களின் மனைவிக்கு அரசு வேலை வழங்காததை கண்டித்தும், தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தியும் அப்பகுதி மீனவர்கள் அன்று 01.08.2023 ஒருநாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் அனைத்து மீனவர் கிராமங்களையும் ஒன்றிணைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர்.


இந்நிலையில், (04/08/2023) அமலி நகர் மீனவ கிராமத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்த கிராமத்திற்கு நேரில் சென்றார். அங்குள்ள ஊர் கமிட்டியார் பங்குத்தந்தை மீனவர்களிடம், மாயமான இருவரின் மனைவிக்கு சத்துணவு மையத்தில் அரசு பணி வழங்குவதாகவும், மேலும் தூண்டில் வளைவு பாலம் அமைக்க 2 மாதத்திற்குள் அனுமதி பெற்று அதற்கான பணிகளை செய்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், மீனவர்களின் போராட்டத்தை கைவிடக்கோரியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அதற்கு மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து எங்கள் கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எங்கள் மக்களை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் எனவே இரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டத்தை தொடருவோம் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.


இதனடியப்டையில் மீண்டும் நாளை தொடர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad