ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதுகலை தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு மாணவி வனஜா, தனது கிராமமான உப்பாரப்பட்டியில் 800 ஆண்டுகள் பழமையான சோழர்கால சிவன் ஆலயமும், கல்வெட்டையும் கண்டறிந்தார்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவுடன் இணைந்து ஆய்வு செய்ததில், இக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. என்றும் அதில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தை பார்க்கும் போது, ஹொய்சாளர்கள் காலகட்டத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று கூறினர். லிங்கத்தின் மேல் பகுதியில் தெளிவாக உள்ளது. ஆவுடையார் பகுதி சதுரமாக உள்ளது. எட்டுப் படை என அழைக்கப்படும் விஷ்ணு பாகம் போன்று உள்ளது என்றும், அதே கோயிலின் அருகில் உள்ள சூரியனின் சிற்பமும், கையில் தாமரை மலருடனும், ஒரு கையானது உடைந்த நிலையில் காணப்படுகிறது.
இந்த சிவலிங்கம் உப்பாரப்பட்டி ஒட்டிச்செல்லும் பாம்பாற்றின் கரையை ஒட்டிய ஊரான, ராமசாமி நகரில் இருந்தது என்றும், அங்கிருந்து பின்னர் மாணவியின் தாத்தாவான கோவிந்தசாமி, உப்பாரப்பட்டியில் கொண்டு வந்து வைத்து வழிபடுவதாகவும், முற்காலத்தில் இந்த லிங்கம் ராமனால் பூஜிக்கப்பட்டதாகவும், அதனால் இந்த லிங்கத்திற்கு ராமலிங்கேஸ்வரர் என்று பெயர் வந்துள்ளது. தங்கள் முன்னோர்கள் கூறியதன் மூலம் அறிந்து கொண்ட தகவலை மாணவி கூறியுள்ளார்.
மேலும் கல்வெட்டு ஒன்றையும் கண்டறிந்து வெளிப்படுத்தி உள்ளார். கல்வெட்டானது வலது இடது இருபுறமாக கல்வெட்டு பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கங்கை தாண்டவம் என்பவன் நிலத்தை தானமாக கொடுத்தார். அந்த நிலத்தை யாராவது அபகரிக்க முயன்றால், தாரப் பசுவை வெட்டி அதனுடைய பாவத்தை பெரும் அளவிற்கு தண்டனை கிடைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஏதேனும் கல்வெட்டு சான்றுகளோ இலக்கியச் சான்றுகளோ கிடைக்கிறதா என, கல்லூரியின் தமிழ்துறை தலைவர் முனைவர் சவிதா மற்றும் வரலாற்று ஆய்வுக் குழுவும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்வியோடு இணைந்து மாணவிகள் இதுபோன்ற திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் மாணவி வனஜாவை, அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சீனி.திருமால்முருகன், அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் முனைவர் ஷோபா திருமால்முருகன், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்திய நாராயணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக