இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு பிரிவில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 95 வாகனங்கள் பொது ஏலம் மூலம்
அகற்றுதல் குறித்து விரிவான அறிக்கையில் வாகன உரிமையாளர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 95 வாகனங்களையும் யாரும் உரிமை கோராததால் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 09.08.2023 ந் தேதி காலை 10.00 மணி அளவில் இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
மேற்படி வாகனங்களை 06.08.2023 மற்றும் 07.08.2023 ஆகிய நாட்களில் பார்வையிடவும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 08.08.2023 ந் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ரூ.15,000/- முன் வைப்புத் தொகையை இராணிப்பேட்டை ஆயுதப்படையில் செலுத்தி தங்களுடைய பெயர் விலாசத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
09.08.2023 அன்று காலை 10.00 மணியிலிருந்து பொது ஏலம் நடைபெறும். மேலும் ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் GST தொகையினை சேர்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக் கொள்ளலாம் என்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக