

மத்திய அரசின் ராஜீவ் காந்தி திட்டத்தின் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கேட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவர் இறந்ததோருக்கு அரசு அறிவித்த தொகைக்கு விண்ணப்பித்த 25 நபர்களுக்கு உப்பளம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 30 ஆயிரம் வீதம் உதவித்தொகைகான ஆணையை உப்பளம் தொகுதி திமுக வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வழங்கினார். பயனாளிகளுக்கு அத்தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதையும் பயனாளிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
உடன் அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல் துணைத் தொகுதி செயலாளர் ராஜி, ஆதி திராவிட துணை அமைப்பாளர் தங்கவேல், திமுக பிரமுகர் நோயல், கிளையைச் செயலாளர்கள் செல்வம்,காளப்பன் விநாயகம், ராகேஷ், கழக சகோதரர்கள் கோபி, ராஜி, பாஸ்கல்,மோரிஸ், ரகுராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக