மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சார்பில் ஏனாதிமங்கலம் கிராமத்தில் இயங்கி வந்த மணல் குவாரியை மீண்டும் திறக்க கோரி மனு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 ஜூலை, 2023

மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சார்பில் ஏனாதிமங்கலம் கிராமத்தில் இயங்கி வந்த மணல் குவாரியை மீண்டும் திறக்க கோரி மனு

.com/img/a/

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சார்பில் ஏனாதிமங்கலம் கிராமத்தில் இயங்கி வந்த மணல் குவாரியை மீண்டும் திறக்க கோரி மனு அளித்தனர்.



விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வந்தன. இந்த நிலையில் கடந்த மாதம் அளவுக்கு அதிகமாக மணல் அல்லிதாக வழக்கு தொடரப்பட்டது அடுத்து விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்தது அதனால் கடந்த ஒரு மாதமாக ஏனாதிமங்கலத்தில் இயங்கி வந்த மணல் குவாரி மூடப்பட்டன.


இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு லாரிகள் அனைத்தும் பிற மாவட்டத்திற்கு சென்று அரசுக்கு வரில் மணல் ஏற்றி வருகின்றன. தற்பொழுது இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய மாவட்ட மணலாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் செயலாளர் பிரபு துணைச் செயலாளர் சங்கர் தலைமையில் ஏராளமான லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் அப்பொழுது அந்த மனுவில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள் உள்ளன இந்த மணல் குவாரி மூடியதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் மணல் லாரி உரிமையாளர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் புகார் மனு அளித்துள்ளன மேலும் உடனடியாக ஏனாதிமங்கலத்தில் உள்ள அரசு மணல் குவாரியை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad