பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் அறநிலையத் துறை ஆணையரிடம் மானியத்தொகை கிடைப்பதற்ங பரிந்துரை செய்தார். மேலும் நேதாஜி நகர் 1 அசோகன் வீதியில் உள்ள பாலமுருகன் தேவஸ்தானத்திற்கும் மானிய தொகைக்கு பரிந்துரை செய்திருந்தார்.


அதன் தொடர்ச்சியாக அறநிலையத்துறையின் மூலம் முதலமைச்சரிடம் இன்று சட்டமன்ற உறுப்பினரிடம் வேதவல்லி கோயிலுகான காசோலை 1,75,000 ரூபாய், அருள்மிகு பாலமுருகன் தேவஸ்தானம் 1,75,000 ரூபாய் மொத்தம் 3,50,000 ரூபாய்கான காசோளையை திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடியிடம் வழங்கினார்.
காசோலையை கோயில் நிர்வாகிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் மகிழ்ச்சியுடன் வழங்கினார். ஊர் பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினருக்கு சால்வை அணிவித்து நன்றிகளை தெரிவித்தனர். உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, திமுக பிரமுகர் நோயல், கிளை செயலாளர்கள் செல்வம், சேகர், ஆறுமுகம் மற்றும் ராகேஷ், கூட்டணி கட்சி சகோதரர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக