மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மகன் கௌதம். இவர் சவுதி அரேபியாவில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஊர் திரும்புவதற்காக சவுதி அரேபியாவில் இருந்து கத்தார் விமான நிலையம் வந்து அங்கிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்துள்ளார்.
இந்த நிலையில் தன் உறவினருக்காக 68 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 12 கிராம் தங்க வளையல் ஒன்றை தனது கை பையில் வைத்து கொண்டு வந்துள்ளார்.
மதுரை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து பார்த்தபோது கைப்பையில் இருந்த தங்க வளையல் தொலைந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கௌதம் உடனடியாக இது குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து 24 மணி நேரத்தில் காணாமல் போன தங்க வளையலை மீட்டு கெளதமிடம் ஒப்படைத்தனர்.
விமான நிலையத்தில் தொலைந்த தங்க நகை 24 மணி நேரத்தில் மீட்டு தந்த அவனியாபுரம் காவல்துறையினரை மதுரை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக