புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பட்டியல் பழங்குடி மேம்பாட்டு கழகம் மூலம் PADCO நிறுவனத்தின் கீழ் தனிநபர் கடனை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிபால் கென்னடி வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 ஜூன், 2023

புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பட்டியல் பழங்குடி மேம்பாட்டு கழகம் மூலம் PADCO நிறுவனத்தின் கீழ் தனிநபர் கடனை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிபால் கென்னடி வழங்கினார்.


புதுச்சேரி மாநில ஆதிதிராவிடர் மற்றும் பட்டியல் பழங்குடி மேம்பாட்டு கழகம் மூலம் பாட்கோ திட்டத்தின் கீழ் தனி நபர் கடனுக்கான தொகையின் ஆணையை  உப்பளம்   சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி  பயனாளிகளுக்கு வழங்கினார், ஐந்து வருட காலமாக பாட்கோ திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதற்கான எந்த கோப்பும் ஆணையும் கையொப்பம் படவில்லை இதனால் சுயதொழில் செய்ய நினைக்கும் ஆதிதிராவிட பட்டியல் இனத்தை சார்ந்தவர்களுக்கு எந்த விதமான உறுதுணையும் இல்லை, இதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்ச்சியாக  புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் இத்துறை  அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துக் கொண்டு வந்தார். 


அதனை தொடர்ந்து இத்துறை இயக்குனர் அசோகன்  மற்றும் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தொடர்ச்சியாக அலுவலகம் சென்று என் தொகுதிக்கு உட்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு கடன் அளித்து அவர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு அடித்தளம் வகுத்து தாருங்கள் என்று பலமுறை கூறினார் சட்டமன்ற உறுப்பினரின் கனிவான அணுகுமுறை மற்றும் கோரிக்கைகளை ஏற்று உப்பளம் தொகுதிக்குட்பட்ட பட்டியல் இனத்தை சார்ந்த சுயதொழில் செய்ய இருக்கும் ஆர்வமுள்ள பயனாளிகளுக்கு ரூபாய் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரையிலான தனி நபர் கடன் வழங்கப்பட்டது. 


அதற்கான ஆணையை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி உப்பளம் சட்டமன்ற அலுவலகத்தில் வழங்கினார். ஆணையைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஐந்தாண்டு காலமாக நான் விண்ணப்பித்தும் எனக்கு கிடைக்கவில்லை தாங்கள் துரித முயற்சியால் எங்களுக்குப் பெற்று தந்ததற்கு  நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். உடன் அவைத்தலைவர் ஹரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, திமுக பிரமுகர் நோயல், மகளிர் அணி சரஸ்வதி,விஜயா, கிளைச் செயலாளர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/