முன்னாள் முதல்வர் மாண்புமிகு டாக்டர். மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா வினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும், பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் இன்று 24.06.2023 கரூர், வெங்கமேடு, எக்விடாஸ் குருகுல மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் அவர்கள் துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திரு.பிரபு சங்கர், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.இளங்கோ, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சிவகாமசுந்தரி, துணை மேயர் திரு.தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் திரு. ரவிச்சந்திரன், 1வது மண்டல குழு தலைவர் திரு. சக்திவேல், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர் நல அலுவலர் திரு. இலட்சிய வர்ணா, முதன்மை கல்வி அலுவலர் திருமதி. கீதா, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக