ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்தில் 2022_23 ஆம் கல்வியாண்டிற்கான முதல் நாள் நிகழ்வுகள் மதிப்புமிகு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் தலைமையில் துவங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள் எழுது பொருள்கள் மற்றும் இனிப்புகள் மாவட்ட கல்வி அலுவலகம் சார்பாக வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்கள்.


இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள், சக்கரவர்த்தி தர்மலிங்கம் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. இந்நிகழ்வுகளுக்குகான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ராபர்ட் ஜெயராஜ் மற்றும் ஆசிரியர் கிருஷ்ணவேணி செய்திருந்தார்கள்.
- ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் அன்வர் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக