மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி மற்றும் மாவட்ட அளவிலான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 ஜூன், 2023

மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி மற்றும் மாவட்ட அளவிலான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS., அவர்கள் மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி மற்றும் மாவட்ட அளவிலான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு  வீரர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தமிழ்நாடு காவல்துறையில் மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டியில் மத்திய மண்டலத்தில் 30 to 40 yards  attack  பிரிவில் முதலிடம் பெற்ற கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் திரு. சிவசக்தி குமார், PC 1938 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டியில்  Kabaddi Team, Volley Ball, Athletic, ஆகிய போட்டிகளில் மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

மேலும் அரவக்குறிச்சி, பரமத்தி, தென்னிலை,வேலாயுதம்பாளையம், காவல் நிலைய சரகங்களில் நடைபெற்ற மது குற்றங்களை கண்டறிந்து 8 குற்றவாளிகளை கைது செய்தமைக்காக திரு.திருநாவுக்கரசு SI, திரு.ரெங்கராஜ் SSI அவர்களுக்கும்,  போக்குவரத்து அலுவலில் போது மக்களிடம்  கனிவுடன் நடந்து கொண்டு, நேரம் தவறாமல் சிறப்பாக பணி செய்தமைக்காக  திரு A.பாஸ்கர் SSI,  திரு அன்பழகன் SI அவர்களுக்கும், கரூர் நகர காவல் நிலைய இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள்  கைப்பேசி பறித்துச் சென்ற எதிரிகளை திறம்பட செயல்பட்டு பிடித்தமைக்காக  திரு P. சாமிநாதன் GR 1 அவர்களுக்கும் மற்றும் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E.சுந்தரவதனம், IPS,. அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/