சர்வதேச போதை பொருட்கள் விழிப்புணர்வு நாள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 ஜூன், 2023

சர்வதேச போதை பொருட்கள் விழிப்புணர்வு நாள்

கரூர் மாவட்டத்தில்  சர்வதேச  போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.E.சுந்தரவதனம் IPS., அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஜெயராம் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களை நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.


கரூர் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருளை முற்றிலும் ஒழிப்பதற்காக பொதுமக்கள் தகவல் தருவதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட காவல்துறையின் செல் போன் 94981-00780 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தருபவர்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


மேலும் போதை பொருள் விழிப்புணர்வு பற்றிய விழிப்புணர்வு பேரணி துவக்கி வைத்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வை மாணவ மாணவிகளிடம்  ஏற்படுத்தினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/