கருவூரின் மையப்பகுதியில் ஜவஹர் கடைத் தெருவையொட்டி அமைந்து அருள்பாலிக்கும் 105 ஆண்டு தொன்மையான அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் பஜனை மடாலயத்தில் 100 ஆம் ஆண்டாக கருவறைக்குள் அனைத்து ஆண் பெண் குழந்தைகளும் சென்று மூலமூர்த்திகளை தொட்டு வணங்கும் "பூலோக சொர்க்க திருநாள் எனும் ஆஷாட ஏகாதசி வழிபாடு வரும் 29 - 6. 23 வியாழக்கிழமை காலை துவங்கி இரவு வரை நடைபெறுகிறது.
உலகெங்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சில ஆலயங்களில் மட்டும் நடைபெறும், இச்சிறப்பு வழிபாடு 28 - 6 -2023 புதன் மாலை துகாராம் கொடி புறப்பாடும். 29-06-2023 வியாழன் காலை 6 மணி சிறப்பு அபிஷேகம் தொடர்ந்து காலை 7மணி முதல் இரவு 10 மணி வரை மூலவரை தொட்டு வணங்கும் வழிபாடும், மாலை 4 மணிக்கு திவ்ய நாம சங்கீர்த்தனம் (பஜனை) 30- 6 - 20 23 வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு காவிரி சாமிக்கு தீர்த்தவாரி நடைபெறும்.


விழாவில் பக்தர்கள் பங்கேற்று சிறப்பிக்குமாறு டிரஸ்டி பி.கே.ஆர்.குணசேகரன், கெளரவத் தலைவர் மேலை பழநியப்பன் உள்ளிட்ட விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக