புதுச்சேரி மாநிலம் மூலக்குளத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விக்னேஷ் என்பவர் ரோலன் வீதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்தார் புஸ்ஸி வீதியில் ஆட்டோ வரும்போது எதிரே வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோவின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவிகள் எட்டு பேர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் காயமடைந்தனர்.


விபத்தை கண்ட பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் விபத்து குறித்து தகவல் அறிந்த புதுச்சேரி மாநில உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி குழந்தைகளை நேரில் சென்று சந்தித்து பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்பு சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இங்கே தரமான சிகிச்சை அளிக்கப்படும் அனைவரும் விரைவாக குணமடைவார்கள் நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று பெற்றோர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
உடன் கிளைச் செயலாளர் ராகேஷ், இருதயராஜ், செழியன், அந்தோணி ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக