புதுச்சேரி அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த உள் கட்டமைப்பு கொண்ட கல்லூரி என்ற விருது, - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 ஜூன், 2023

புதுச்சேரி அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த உள் கட்டமைப்பு கொண்ட கல்லூரி என்ற விருது,


விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சுகாதாரத் துறையில் சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட கல்லூரி என்ற விருது வழங்கப்பட்டது. 


இது குறித்து துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:குளோபல் ட்ரையம்ப் அறக்கட்டளையானது மதிப்பீடுகள் ஆராய்ச்சி கல்வி மற்றும் நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி போன்றவற்றை பகுப்பாயும் உலகளாவிய ஓர் முன்னணி நிறுவனமாகும். கல்வியியல் மற்றும் சந்தைப்படுத்துதலில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை ஆராய்ந்து அங்கீகரிக்கும் விதமாகவும், அறிவை மேம்படுத்த உதவும்  தளமாகவும் ,விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்யசபா டாக்டர். கனிமொழி, என்.வி.என் சோமு ஆகியோர் விருதினை வழங்கினர்.


துறையின் டீன் சிறப்புரையாற்றினார். டீனுக்கு பல்கலைக்கழகத்தின் டாக்டர். கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர். அனுராதா கணேசன் மற்றும் துணை பேராசிரியர்கள் பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்தனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/