ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஏ.வி.எம். எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அரசு உத்தரவின்படி இன்று பள்ளி திறக்கப்பட்டது. புதிய மாணவர்கள் பழைய, மாணவர்கள் திரளாக பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு பள்ளித் தாளாளர் ஜெயக்குமார் பூக்கள் கொடுத்து வரவேற்றார்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பணியாளர்கள் மாணவ மாணவிகள் சிறப்பாக கலந்து கொண்டனர்.இதனையடுத்து பள்ளி தாளாளர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். இதனையடுத்து ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக