புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 78 லட்சம் செலவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கழிவுநீர் சேகரிப்பு கிணற்றை திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி நேரில் சென்று ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 ஜூன், 2023

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 78 லட்சம் செலவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கழிவுநீர் சேகரிப்பு கிணற்றை திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி நேரில் சென்று ஆய்வு.


புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட காஜியார் வீதியில் பாதாள வடிகால் கழிவு நீர் வெளியேறி பொதுமக்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் நிலையில் துர்நாற்றம் வீசி கொண்டிருந்தது. இது சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி யிடம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்  பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சங்கரிடம்  உடனடியாக பாதாள வடிகால் கழிவு நீரை உறிந்து எடுக்கும் வாகனம் மூலம் சுத்தம் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார் உடனே சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி யின் கோரிக்கை ஏற்று சில மணி நேரத்திலேயே பாதாளவடிக்கால் சுத்தம் செய்யப்பட்டது. 


அதனைத் தொடர்ந்து பொதுப்பணி துறை மூலம் கட்டப்பட்டு கொண்டிருக்கும் கழிவு நீர் சேகரிப்பு கிணற்றை சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று அப்பணியினை ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். இப்பணியினை திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி  தான் பூமி பூஜை போட்டு சுமார் 78 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார்.அப்பணி முடிந்து விட்டால் ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறுவது குறைந்து விடும் உப்பளம் தொகுதியில் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி கழிவுநீர் நிரம்பிவிடுகிறது  அனைத்து கழிவு நீர்களும் புதிதாக கட்டப்படும் கிணற்றில் சேகரிக்கப்பட்டுவிடும் ஆதலால் அப்பணியை விரைந்து செய்து கொடுக்கும்படி அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள்  கேட்டுக் கொண்டார். 


உடன் திமுக தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில பிரதிநிதி மணிகண்டன், விசிக தொகுதி செயலாளர் கன்னியப்பன், கழக கிளைச் செயலாளர்கள் ராகேஷ் மற்றும் ஈசாக்கு ஆகியோர் உடன் இருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/