

"இயற்கை வளங்கள்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் முதன்மை மேலாளர் டாக்டர்.ஹெச்.ஆர்.ஜே.சிவக்குமார் பங்கேற்று மாணவர்களுக்கு"இயற்கை வளங்களின் பயன்பாடுகள்" குறித்து விழிப்புணர்வுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு "இயற்கை வளங்கள் சிறந்ததா, செயற்கை வளங்கள் சிறந்ததா என்ற தலைப்பின்கீழ் விவாதப் போட்டியும், அதனைத் தொடர்ந்து நெகிழி கழிவு மூலம் கலைசிற்பம் உருவாக்கும் போட்டி நடத்தப்பட்டது. முடிவில் கல்லூரியின் உதவி பேராசிரியர் குளோரி மெர்லின் நன்றி கூறினார். 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபெற்றனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, குளோரி மெர்லின், சந்தோஷ் விரிவுரையாளர் சிவசங்கரி மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக