கரூர் மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 13 மே, 2023

கரூர் மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா.

கரூரில் புகழ்பெற்ற  அருள்மிகு மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை 14.05.2023   கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்க உள்ளது. அதனை தொடர்ந்து 19.05.2023 (வெள்ளி)பூச்சொரிதல், 21.05.2023 காப்புகட்டுதல், 28.05.2023 (ஞாயிறு) எதிர்காப்பு கட்டுதல், 29.05.2023 (திங்கள்)பால்குடம் அக்னி சட்டி, 30.05.2023 (செவ்வாய்) அக்னி சட்டி அலகு குத்துதல்31.05.2023 (புதன்) கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் என சிறப்பாக நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் எடுத்தல் 29.05.2023 திங்கள் கிழமை காலை 7:15  மணிக்கும் கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி 31.5.2023 புதன்கிழமை மாலை 5.15 மணிக்கு நடைபெறுகிறது.


மேலும், 21.05.2023 முதல் 05.06.2023 வரை மாலை 7 மணிக்கு சிறப்பு வாகனத்தில் அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு மாவடி ராமசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது, விழாக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலரும் திருக்கோயில் ஊழியர்களும் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/