நிகழ்ச்சியில் புகையிலையின் தீமைகள் , அதனால் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து நாடகங்கள் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மக்களுக்கு நடித்துக் காட்டினர்.மேலும் அப்பகுதி மக்களக்கு புகையிலை துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து புகையிலை விழிப்புணர்வு குறித்து சிறந்த வாசகங்களை எழுதிய மாணவ,மாணவியர்க்கு மற்றும் நாடகங்கள் அரங்கேற்றிய மாணவ, மாணவியர்க்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இயக்குனர் பொறுப்பு .ஆன்ட்ரூ ஜான் சில்வெஸ்டர் இனைத்து வழங்கினார்கள்.


பேராசிரியர் அனிதா வரவேற்புரை வழங்கினார். இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் சில்வெஸ்டர், சிறப்பு விருந்தினரான டாக்டர் டி நாராயணன் அவர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். முடிவில் உதவி பேராசிரியர் .கிரண்குமார் நன்றி கூறினார்.
விழிப்புணர்வு பேரணி கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் நுழைவு வாயிலிருந்து தொடங்கி கிருமாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை சென்று முடிவடைந்தது. 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் பங்கு பெற்றனர்.இதனைத் தொடர்ந்து கல்லூரியில் மாணவர்கள் மூலம் நுரையீரல் வடிவம் உருவாக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சத்துரு,கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் அனிதா, வளர்மதி, விரிவுரையாளர் டாக்டர் நிவேதா, உதவி பேராசிரியர் கிரண்குமார், நாட்டு நலப் பனித்திட்ட ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் கோவரத்தனவிஷ்ணு மற்றும் கல்லூரிமின் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப துறையின் மாணவ மாணவிகள் மற்றும் நாட்டு நலப் பனித்திட்ட மாணவ மாணவிகள் திறம்படச் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக