மருத்துவ கல்லூரி வளாகத்தில் அழிந்து வரும் தேசிய உயிரினங்கள் தினம் அனுசரிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 மே, 2023

மருத்துவ கல்லூரி வளாகத்தில் அழிந்து வரும் தேசிய உயிரினங்கள் தினம் அனுசரிப்பு.


புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்கூல் ஆஃப் ‌அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் அழிந்து வரும் தேசிய உயிரினங்களின் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிதுறை டீன் பேராசிரியர் டாக்டர் ப. செந்தில் குமார்   வழிக்காட்டுதலின் படி இயக்குநர் பொறுப்பு ஆண்ட்ரு ஜான் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். சுற்றுச்சூழல் அமைப்பின்‌‌ ஒருங்கிணைப்பாளர்  குளோரி மெர்லின்  வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக  புதுச்சேரி கல்வித்துறையின் முன்னாள் துணை இயக்குனர் டாக்டர் வி.கிருஷ்ணன் கலந்து கொண்டு ‌அழிந்து வரும் உயிரினங்களை எவ்வாறு காக்க வேண்டும் என்பதை  பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் ஓவிய விளக்கக்காட்சி போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது‌.முடிவில் கல்லூரியின் விரிவுரையாளர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்  நன்றி‌கூறினார். 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபெற்றனர்.


இந்நிகழ்ச்சிக்கான‌ ஏற்பாடுகளை  நிர்வாக அதிகாரி சந்துரு, ,துணை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் விரிவுரையாளர் சிவசங்கரி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/