குளித்தலை அருகே அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு காளியம்மன், அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோவில் வைகாசி பெருவிழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 22 மே, 2023

குளித்தலை அருகே அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு காளியம்மன், அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோவில் வைகாசி பெருவிழா


கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நங்காரம் கிராமம் மேட்டு தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு காளியம்மன் அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோவில் வைகாசி பெருவிழா நடைபெற்றது.

முன்னதாக நேற்று வைகாசி மாதம் ஏழாம் நாள் 21/5/2023 ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்த குடம்,பால்குடம் மாலை 5 மணிக்கு சந்தன காப்ப அலங்காரமும் இரவு 9 மணி அளவில் உய்யக்கொண்டான் நதிக்கரையில் கரகம் பாலித்து வானவேடிக்கையுடன் அம்மன் குடிபுகும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இன்று 22.05.2023 திங்கட்கிழமை காலை அக்கினி சட்டி அலகு குத்துதல் நடந்தது தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கருப்பண்ணசாமி குட்டி குடித்தல் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி மதியம் 12 மணியளவில் நடைபெற்றது, நாளை 23.05.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மஞ்சள் நீராடி அம்மன் கரக ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்ச்சியுடன் விழாவானது சிறப்பாக நிறைவு பெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை மேல் நங்கவரம் மற்றும் மேட்டு தெரு  பொதுமக்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/