கரூரில் இன்று உள்ளூர் விடுமுறை & போக்குவரத்து வழி மாற்றம் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 31 மே, 2023

கரூரில் இன்று உள்ளூர் விடுமுறை & போக்குவரத்து வழி மாற்றம்

photo_2023-05-31_11-45-51

கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழா இன்று மாலை கம்பம் ஆற்றுக்குச் அனுப்புப் நிகழ்ச்சியை முன்னிட்டு கரூர் மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை. விடுமுறையை ஈடுசெய்ய ஜூன் 3-தேதி சனிக்கிழமை அரசு வேலை நாளாக செயல்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவிப்பு.


tamilaga%20kural

share%20it%20-%20tamilagakural

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று மாலை 5.00 மணி அளவில் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதை ஒட்டி கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


நிகழ்ச்சி நடைபெறும் பசுபதிபாளையம் வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாநகரின் முக்கிய பகுதிகளான வெங்கமேடு தாந்தோணிமலை காந்திகிராமம், கோவை சாலை ஆகிய பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகன போக்குவரத்து இன்று பிற்பகல் 1.00 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad