இராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற வளர்மதி இ.ஆ.ப., பொறுப்பேற்றுக் கொண்டார். மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் கே.முஹம்மத் அயூப் தலைமையில் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட ஆட்சியரிடம் மேல்விஷாரத்திற்கு வரும் நகரப் பேருந்துகளை சீரான கால இடைவெளியுடன் இயக்க தாங்கள் ஆவண செய்ய வேண்டும் மேலும் 01-02-2023 அன்று ஆற்காட்டிலிருந்து வேலூர் நோக்கி வந்த பேருந்து தர்கா நிறுத்தத்தில் ஒரு பெண்மணி பேருந்தில் ஏறிச் செல்வதற்கு முன் பேருந்து இயக்கப்பட்டதால் அப்பெண்மணி பேருந்திலிருந்து கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்கள். அப்போது அசோசியேஷன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- வாலாஜா செய்தியாளர் நிஹால் அஹமத்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக