கல்லூரி முதல்வர் தேரடிமணி தலைமையில் பேராசிரியர்கள் தாமோதரன் இணை பேராசிரியர்கள் செந்தில்நாதன், சபரிநாதன் ,உதவி பேராசிரியர் சுப்புலட்சுமி, தோட்டக்கலை உதவி இயக்குநர் பா. இராஜா, தோட்டக்கலை அலுவலர் விவேகானந்த பத்மநாபன், தோட்டக்கலை உதவி அலுவலர் ஆ.பொற்கொடி, மு.முனிசாமி, கா.கணேஷ்குமார், கா.குணா ஆகியோரின் முன்னிலையில் வாழையில் பரவி வரும் சிகடோகா இலைப்புள்ளி என்னும் நோய்க்கு எதிராக விவசாயிகளிடம் கலந்து உரையாடினார்.
பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றி அழிக்குமாறும் களைகள் இல்லாமல் பராமரிக்குமாறும் அதிக இடைவெளி விட்டு வாழை கன்றுகளை நடுமாறும் தண்ணீர் தேங்க விடாமல் நல்ல வடிகால் வசதியுடனும் வாழை தோட்டத்தை பராமரிக்குமாறு கூறினர்.நோய் ஆரம்பித்து 10-15 நாட்கள் இடைவெளியில் 3 முறை 0.1% கார்பென்டாசிம் அல்லது 0.1% புரோபிகனோசோல் மற்றும் டீபோல் போன்ற ஒட்டும் முகவருடன் கலந்து தெளிக்கவும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.இதைத் தொடர்ந்து மாணவிகள் ஜஸ்வர்யா, தீபிகா, திவ்யா, ஹரிப்பிரியா, ஹரிணி, ஜெயந்தி, கல்பனா, கனிஷ்கா ஆகியோர் வாழையில் வரும் பூச்சிகளையும் நோய்களையும் கண்டறிந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக