
இது இக்கண்காட்ச்சியோடு நின்று விடாமல் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் புத்தகங்கள் அன்பளிப்பாக தரலாம் என்றும் தெரிவித்தார், மேலும் இதுவரை புத்தகங்கள் கடனாக பெற்று சிறை கைதிகளுக்கு வாசிக்க தந்ததாகவும், BAPASI எந்தவித பணமும் பெற்றுக்கொள்ளாமல் அமைத்துதந்திருந்த அரங்கின் மூலமாக நிரைய புத்தகங்கள் பொதுமக்கள் பரிசளித்துள்ளனர் என்று கூறினார், சில கைதிகள் சிறையில் இருந்துகொண்டே படித்து பட்டம் பெற ஆர்வம் கொண்டுள்ளனர்.
அதற்கான புத்தகங்கள் பொதுமக்கள் பரிசாக தரலாம், காவலர்கள் இது போன்ற பல திட்டங்களை ஏற்படுத்தி வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக இதை முன்னெடுத்து வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார். இது போன்ற தங்களது முயற்ச்சிக்கு பொதுமக்கள் எப்போதும் தொடர்ந்து ஆதரவு தர வேண்டுமென்றும் திரு. காமராஜர் அவர்கள் வலியுறுத்தினார்.
பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள் புத்தக தானம் செய்ய விரும்புவோர் கீழ்வரும் எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 9941265748,7904281344, 044-28521306, 044-28521512.
- தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் மு. பிரபாவதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக